கரூர், தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனைகளை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். 4 மணிநேரத்திற்கு மேல் நடந்த இந்த சோதனை நடைபெற்றது. ரூ. 57 ஆயிரம் பறிமுதல் நகராட்சி ஆணையர் வெங்கடாசலபதி மற்றும் 5க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 57 ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-anti-corruption-raid-at-municipal-office-rs-57k-cash-seized




