திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, சின்னமண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் தினேஷ்குமார் (26 வயது). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை செய்து வந்தார். வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் சுகுணா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தினேஷ் குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவரது மனைவி சுகுணாவிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக சுகுணா நேற்று காலை தனது மாமனார் கோவிந்தராஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து மகன் தினேஷ் குமாரை கோவிந்தராஜ் கண்டித்துள்ளார். அதன்பின் தினேஷ்குமார் மனைவி சுகுணாவுடன் குழந்தைக்கு தடுப்பூசி போட திருப்பத்தூர் சென்று விட்டு மதியம் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் அறைக்குள் சென்ற தினேஷ்குமார் கதவை பூட்டி உள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது வழியிலேயே தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/father-condemns-fake-relationship-army-soldiers-bizarre-decision




