வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நியூயார்க் - வாஷிங்டன் மோதல் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 86 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் 18.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நியூயார்க்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாஷிங்டன் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் வீரர் அண்ட்ரிஸ் கஸ் 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முன்னதாக, இரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-washington-freedom-beats-mi-new-york




