சென்னை, தமிழகத்தில் புதிய திட்டங்களில், வீடு, மனை வாங்குவதற்கான பத்திரம் வங்கியில் கடன் பெறுவோர் ஆவண ஒப்படைப்பு அடமானம், கடன் நிறைவுக்கான ரசீது போன்ற ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யலாம். சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல், இந்த ஆவணங்களை பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பயன்பாட்டு நிலையில் எழும் கோரிக்கைகள் அடிப்படையில் இத்திட்டத்தில் சில விஷயங்களை, பதிவுத்துறை சரி செய்து வருகிறது. அந்த வகையில், நேரடி வருகை இல்லாமல், பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்யும்போது, கட்டணம் செலுத்தி பெறப்படும், வில்லங்க சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டது. இதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள் என்ன என்பதை, அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். அதை ஏற்று வில்லங்க சான்று உள்ளிட்ட விஷயங்களில், நடை முறைகளை மாற்ற பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பதிவுத்துறை ஐ.ஜி. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:- * புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்கள், அடமான ஆவணம் போன்றவற்றை பதிவு செய்ய, கட்டணமின்றி இணையதளத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதழ் போதுமானது. * ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்களை, குடிமக்கள் நுழைவு வாயிலாக தாக்கல் செய்யப்பட்டாலும் பதிவுக்கு ஏற்கப்படும். * கடன் நிறைவு தொடர்பான ரசீது ஆவணங்களை பதிவு செய்ய வில்லங்க சான்று பார்க்க தேவையில்லை. நேரடி வருகையில்லா பத்திரப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் செலுத்த வேண்டாம். * நேரடி வருகையில்லா பத்திரப்பதிவில், ஆவணதாரர் எங்கிருந்தும் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய முடியும் என்பதால் 'பிரசன்டேஷன் பவர்' எனப்படும் சிறப்பு பொது அதிகார ஆவணங்களை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/major-change-in-property-registration-free-encumbrance-certificate-now-sufficient




