சென்னை, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் இல்லத்தில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி அன்பில் மகேசின் திருச்சி இல்லம் மற்றும் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மோசடி புகார் முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-a-search-at-the-residence-of-former-minister-anbil-mahesh




