தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெண்ணிடம் 3 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தங்க செயின் பறிப்பு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகர் ஈபி காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (வயது 45). இவர் கடந்த 6-ம் தேதி ராஜீவ்நகர் அருகே நின்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். வாலிபர் கைது இந்த சம்பவம் குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பாலாஜி நகரைச் சேர்ந்த காளிராஜ்(31) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-snatching-3-sovereign-gold-chains-from-woman




