வாஷிங்டன், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும், இடையே நீடிக்கும் போர்ப் பதற்றத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், வார இறுதி விடுமுறைக்காகச் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது கேம்ப் டேவிட் பயணத்தைப் பாதியில் ரத்து செய்து விட்டு வெள்ளை மாளிகைக்கு அவசரமாகத் திரும்பியுள்ளார். மேரிலாந்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையான 'கேம்ப் டேவிட்' பகுதிக்கு வழக்கமான ஓய்வுக்காக சென்றிருந்த டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருப்பார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால். நேற்று மாலையே தனது அட்டவணையைமாற்றிக்கொண்ட அவர், ஹெலிகாப்டர் மூலம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அவசரமாக அழைத்துவரப்பட்டார். இதற்கிடையே போரைமுடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் தரப்பில் மூன்று முக் கிய நிபந்தனைகள் கத்தார் மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது மற்றும் கடல்வழி தடைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சில் முன்வைத்துள்ளது. ஈரானின் இந்தத் தூது வாஷிங்டனுக்கு வந்து சேர்ந்த சில மணிநேரங்களிலேயே டிரம்ப் வெள்ளை மாளிக்கைக்கு விரைந்திருப்பது தற்செயலானது அல்ல என்று கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவே டிரம்ப் உடனடியாக திரும்பியுள்ளதா கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் நிலைமை மோசமடையக்கூடும் என்பதால், அங்குள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் நிபந்தனைகளை ஏற்பதா அல்லது போரைத் தீவிரப்படுத்துவதா என்பது குறித்து டிரம்ப் எடுக்கப் போகும் முடிவு உலகநாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/donald-trump-cuts-short-weekend-at-camp-david-as-tensions-rise-in-middle-east




