சென்னை, தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இந்நிலையில் நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? என்று பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை தமிழர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதா? தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவித்த உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார். 103 பேர் இந்நிலையில் இதற்கு சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் நேபாளத்திற்கு சென்று உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேபாள பெருவெள்ளத்தில் தப்பி அங்குள்ள திமுரே முகாமில் தஞ்சமடைந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேரை, சாலை வழியாக காத்மாண்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கவில்லை நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 34 தமிழர்கள் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடனும் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பெரு வெள்ளத்தில் 80 பாலங்கள், 40 கி.மீ சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன” என்று கூறினார். ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து பேசிய அவர், “அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்-அமைச்சர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-rescue-103-tamils-stranded-in-nepal-floods-minister-rajmohan




