நொய்டா, உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரில் வசிக்கும் 5 வயது சிறுவன் அவ்யுக்த் சிங் மழலையர் வகுப்பில் படித்து வரும் இந்த சிறுவன், 1 நிமிடத்தில் 46 வகையான டைனோசர்களின் படத்தை பார்த்து துல்லியமாக அடையாளம் கண்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். தாய் கொடுத்த ஊக்கம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரில் வசிக்கும் 5 வயது சிறுவன் அவ்யுக்த் சிங், பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியுடன் வசித்து வரும் அவ்யுக்த்திற்கு, அவனது தாய் நிதி ஷர்மா தான் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கியுள்ளார். சிறுவனின் அசாத்திய ஞாபக திறனை கண்ட அவரது தாய், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சிக்குமாறு தொடர்ந்து அவனுக்கு ஊக்கமளித்து வந்துள்ளார். இதையடுத்து, தினசரி பல்வேறு டைனோசர் படங்களை வைத்து, அவற்றின் பெயர்களையும் உடல் அமைப்புகளையும் மிக குறுகிய நேரத்தில் கண்டறியும் சாதூர்யமான பயிற்சியில் அவ்யுக்த் ஈடுபட்டு வந்துள்ளார். முந்தைய சாதனைகள் சிறுவன் 2 வயது 9 மாதங்களிலேயே, 1 நிமிடம் 48 வினாடி போட்டிகளில் கலந்து கொண்டு உலக அளவில் புகழ்பெற்ற 50 ஆளுமைகளின் முகங்களை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரைப் முத்திரை பதித்துள்ளார். மேலும், 50 டைனோசர்களை 43.35 வினாடிகளில் அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முந்தைய உலக சாதனை முறியடிப்பு இந்த கடின முயற்சிக்கு தற்போது நற்பலன் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக 1 நிமிடத்தில் 41 டைனோசர்களை அடையாளம் கண்டதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அவ்யுக்த் 1 நிமிடத்தில் 46 டைனோசர்களை மிகத் துல்லியமாகக் கூறி, முந்தைய சாதனையை முறியடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளார். தனது சாதனை குறித்து சிறுவன் அவ்யுக்த் கூறுகையில், "கின்னஸ் உலக சாதனை என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட மிக உயர்ந்த அங்கீகாரம் என்று அம்மா கூறக் கேட்டிருக்கிறேன். அதுவே எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது என மழலையின் சிரிப்புடன் அவர் கூறியுள்ளார். டைனோசர்களின் ராஜா அவ்யுக்துக்கு டைனோசர்களில் 'டி-ரெக்ஸ்' (T. rex) வகை தான் மிகவும் பிடிக்குமாம். அதுதான் டைனோசர்களின் ராஜா" என்று மழலை மாறா குரலில் உற்சாகத்துடன் கூறுகிறார். ஏற்கனவே தனது அசாத்திய நினைவாற்றலால் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள இந்த 5 வயது சுட்டி, தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/five-year-old-indian-boy-sets-guinness-world-record




