மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோருக்கு, பெப்சி உள்ளிட்ட திரையுலகத்தினர் நடத்தும் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம். இந்தச் சங்கத்தின் தலைவராகத்தான் இறப்பதற்கு முன்பு வரை இருந்தார் பாக்யராஜ். சமீபத்தில் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி தலைவர் ஆர்.கே, செல்வமணி ஆகியோரின் ஆதரவுடன் வி.சி.குகநாதன் தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் சேரன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டதில், தலைவர், செயலாளர், பொருளாளர். துனைத் தலைவர்கள், மற்றும் இணைச் செயலாளர் பதவியில் ஓர் இடத்தை சேரன் அணி வெல்ல, மூன்று இணைச் செயலாளர்கள் பதவியிடங்களையும் 12 செயற்குழு உறுப்பினர்களில் 8 இடங்களையும் குகநாதன் அணி வென்றது. ஆக மொத்தமுள்ள 21 இடங்களில் 10 பதவிகளை சேரன் அணியும் 11 இடங்களை குகநாதன் அணியும் வென்றன. cheran இந்தப் பின்னணியில்தான் தற்போது பெப்சியின் விழாவை சங்கம் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ரவி மரியாவை எழுத்தாளர் சங்கத்தின் பிரதிநிதியாக பெப்சி தரப்பு அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றிருக்கிறார் சங்கத்தின் தலைவர் சேரன். மேலும் இது தொடர்பான சங்க அறிக்கையில் அவர், `விழாவில் கலந்து கொள்ள பல வகையில் முயன்றும் எங்களது உணர்வுகள் மதிக்கப் படாததால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. சங்க உறுப்பினர்களின் சுயமரியாதையைக் காக்கும் பொருட்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். வரும் காலங்களிலாவது தாய் அமைப்பான பெப்சி எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேன்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்' என்க் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/film-writers-association-boycotts-fefsis-k-bagyaraj-memorable-function



