போஸ்டன், 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது மற்றும் 3-வது சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி உள்பட 40 அணிகள் நடையை கட்டின. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் காலிறுதி சுற்று நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு போஸ்டனில் நடக்கும் முதலாவது காலிறுதியில் 2 முறை சாம்பியனான தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி, 7-ம் நிலை அணியான மொராக்கோவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகள் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டம் டிரா ஆனது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/world-cup-quarter-final-france-to-face-morocco-tomorrow




