புதுடெல்லி, இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டால் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டால், ஆடுகளங்கள், பி.சி.சி.ஐ. மற்றும் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு இழிவான விமர்சனங்களும், மறைமுக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படும். இந்த இரட்டை நிலைப்பாடு மிகவும் வெளிப்படையாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத திறமையின்மையே இதற்குக் காரணம் என்ற வழக்கமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். ஆனால், வெளிநாட்டு பேட்ஸ்மேன்களால் சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாதபோது மட்டும் அதே கேள்வி எழுப்பப்படுவதில்லை. அப்போது அவர்களிடம் திறமை இல்லை என்று கூறாமல், ஆடுகளத்தில் இருக்கும் ஏதோ ஒரு மறைந்திருக்கும் குறைபாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது. என கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் 2நாளில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/gavaskar-slams-the-fact-that-test-matches-in-india-conclude-in-just-three-days




