சென்னை, சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருடைய வீட்டில் நேற்று 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டின் போர்டிகோவில் பாம்பு திரிவதைக் கண்ட வீட்டின் பணியாளர்கள் சுகன்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சுகன்யா திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்து நடிகை சுகன்யா ஒரு பதிவை வெளிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/commotion-as-a-snake-enters-actress-sukanyas-house




