மொழிவாரி மாநிலங்கள் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது, 28 மாநிலங்கள் இந்தியாவில் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள், இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், தங்களுக்குள் பிரிந்துகொள்ளலாம், சேர்ந்துகொள்ளலாம். மாநிலங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்படலாம். மாநிலத்திற்கு புதிய பெயர் சூட்டப்படலாம். ஆனால், ஆந்திராவைத் தனியாகப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்ததால், 1953ல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் ஃபசல் அலி, கே.எம். பணிக்கர், எச்.எம். குன்ஸ்ரு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணையம், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க பரிந்துரைத்தது. அதன்படி பல புதிய மாநிலங்கள் உருவாயினர். சென்னை மாநிலம் 1956ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரசை சேர்ந்த சங்கரலிங்கனார் 1957ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1961 பிப்ரவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது. பெயர் மாற்ற தீர்மானம் இந்த நிலையில்தான் 1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி இதற்கான தீர்மானத்தை 1967 ஜூலை 18ஆம் தேதி முதல்-அமைச்சர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தில் பேசிய அண்ணா, "நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது" என்றார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதும், அண்ணா எழுந்து "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறிவிட்டு, "தமிழ்நாடு" என மூன்று முறை குரல் எழுப்பினார். சட்டப்பேரவையின் எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று 3 முறை கோஷம் எழுப்பினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், தங்கள் மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படாத மாநிலமாகவும் அதன் முந்தைய வடிவமான சென்னை மாகாணத்திலிருந்தே வேறு மாநிலங்கள் பிரிந்ததாலும் மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமல் இருந்தது. தமிழ்நாடு மாநில தினம் இந்த நிலையில், கடந்த 2019ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர்1-ஆம் தேதியையே தங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவிலிருந்து பிரிந்து தனி மாநிலமான ஜூன் 2ஆம் தேதியை மாநில தினம் ஆக கொண்டாடி வருகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த நாளை மாற்ற முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று அப்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், "1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-name-ta




