கூடலூர், நீலகிரி மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்பு காரணமாக நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதிகளான மாவனல்லா, மசினகுடி, மாயார், சிரியூர், சிங்காரா மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இடம் பெயரும் வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள புற்கள் அனைத்தும் காய்ந்து கருகி காட்சியளிக்கின்றன. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட பெரிய வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன. பொதுமக்கள் கோரிக்கை அதே சமயம், போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி மான்கள் உள்ளிட்ட சிறு வனவிலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, வனவிலங்குகளின் பசியை போக்க வனத்துறையினர் வெளியில் இருந்து பசுந்தீவனங்களை கொண்டு வந்து வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-forest-drought-green-fodder-shortage-for-wildlife




