கோவை, கோவை மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தினந்தோறும் சுமார் 2 முறை மின்தடை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தினமும் 7 முதல் 10 முறை மின்வெட்டி ஏற்பட்டு வருகிறது. இதனால் தொழில் நகரமான கோவையில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் மின்தடை காரணமாக எந்திரங்கள் பாதியிலேயே நின்றுவிடுவதால், மூலப்பொருட்கள் வீணாவதுடன் விலையுயர்ந்த உதிரி பாகங்களும் சேதமடைவதாக கூறப்படுகிறது. ஒரு எந்திரத்திற்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.2,000 வரை இயக்க இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்படுவதாகவும், கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு குடிசை மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “கோவையில் உள்ள சுமார் 50 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் வேலை ஆணை அடிப்படையில் இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக சில துணை மின் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 முறைக்கும் மேல் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டுள்ளது. சில துணை மின் நிலையங்கள் 1 முதல் 2 மணி நேரம் வரை மின் வெட்டை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே உயர்ந்த நிலையான மின் கட்டணம், மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் தவித்து வரும் தொழில் துறையினருக்கு இந்த மின்தடை கடுமையான அடியைக் கொடுத்துள்ளது. மின்பற்றாக்குறை மற்றும் விநியோகத்தில் சிரமம் இருந்தால், மின்வாரியம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இதன் மூலம் தொழில் அதிபர்கள் தங்கள் எந்திரங்களையும் உதிரி பாகங்களையும் பாதுகாக்க முடியும். இந்த மின்தடைகளில் இருந்து கோவையை காக்க அரசு அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இது குறித்து மூத்த மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “உள்ளூர் மின்மாற்றிகளில் ஏற்படும் அதிகப்படியான சுமை காரணமாக சில நேரங்களில் மின் தடையோ அல்லது பழுதோ ஏற்படுகிறது. மின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் பியூஸ் பழுதடைவதால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-power-outages-in-coimbatore-over-the-past-three-days-msmes-distressed-over-losses-amounting-to-up-to-30-crore




