கவுகாத்தி அசாமில் வெள்ள பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கில் அமைந்துள்ள அசாம் மாநிலம் கடுமையான வெள்ளப்பெருக்கால் தொடர்ந்து பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கிராமங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 107 ஆக உயர்வு இந்நிலையில், அசாமில் மொத்த பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள், 20-க்கும் மேற்பட்ட பெண்கள், 17 குழந்தைகளும் அடங்குவர். இவற்றில் சிவசாகர் மாவட்டத்தில் 53 பேரும், சராய்தியோ மாவட்டத்தில் 22 பேரும், ஜோர்ஹாத் மாவட்டத்தில் 9 பேரும் அதிக அளவாக உயிரிழந்து உள்ளனர். 25 மாவட்டங்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. 3 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நடப்பு ஆண்டில் மொத்தத்தில் 25 மாவட்டங்களை சேர்ந்த 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,734 கிராமங்களும் பாதிப்படைந்து உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/assam-flood-death-toll-rises-to-107




