டோக்கியோ, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஆக்கி தொடரில், இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் வலுவான தென் கொரியாவை எதிர்கொள்கிறது. 'பி' பிரிவில் ஆதிக்கம் இத்தொடரின் 'பி'-பிரிவில் (Group B) களம் கண்ட இந்திய அணி, தான் விளையாடிய 5 போட்டிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. மொத்தம் 66 கோல்களைக் குவித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய அணியின் குரூப் சுற்றுப் போட்டி முடிவுகள்: உஸ்பெகிஸ்தான்: 19-0 என்ற கோல் கணக்கில் தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி. இந்தோனேசியா:17-1 என்ற கோல் கணக்கில் வெற்றி. தாய்லாந்து: 20-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி. ஜப்பான் (நடத்தும் நாடு): 3-1 என்ற கணக்கில் வெற்றி. சிங்கப்பூர்: 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரிவு சுற்றை நிறைவு செய்தது. தென் கொரியாவின் பயணம் தென் கொரிய அணி 'ஏ' பிரிவில் (Group A) ஐந்து போட்டிகளில் விளையாடி, நான்கு வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.பிரிவு சுற்றில் முதலிடம் பிடித்த சீனாவிடம் மட்டுமே தென் கொரியா 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 44 ஆண்டுகால தங்கம் கனவு இந்திய மகளிர் ஆக்கி அணி கடைசியாக 1982-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதன்பிறகு கடந்த 44 ஆண்டுகளாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியா போராடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/hockey/asian-games-history-beckons-as-unbeaten-india-face-south-korea-in-womens-hockey-semifinal




