திருப்பதி, திருப்பதி அருகே பாலிம்பாடு கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் பழுதுநீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்தது இதில், மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக பலியானார். மின்சாரம் தாக்கியது திருப்பதி மாவட்டம் தொரவாரிசத்திரம் மண்டலத்திற்கு உட்பட்ட பாலிம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமணகுமார் (வயது 33). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று பாலிம்பாடு கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதாக மின்வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரமணகுமார் அந்த மின்கம்பத்தில் ஏறி பழுதுநீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் ரமணகுமார் மீது மின்சாரம் பயங்கரமாகதாக்கியது. தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தலைகீழாக தொங்கிய உடல் மின்சாரம் தாக்கிய வேகத்தில், ரமணகுமாரின் உடல் மின்கம்பத்திலேயே தலைகீழாக தொங்கியது. இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியை கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர். உடனே இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, அந்த பகுதியில் மின்சார விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மக்கள் குற்றச்சாட்டு பழுதுபார்க்கும் பணிக்காக ரமணகுமார் மின்கம்பத்தில் ஏறியபோது, மின்சார விநியோகத்தை நிறுத்தாமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் மக்கள் கூறினர். மேலும், அவருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். தொங்கிய நிலை இதற்கிடையே, மின்கம்பத்தில் இருந்து ரமணகுமாரின் உடலை உடனடியாக கீழே இறக்க முடியாமல், நீண்ட நேரம் அங்கேயே தொங்கிய நிலையில் இருந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியதோடு, பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/tiruppati-contract-worker-electrocuted




