திருச்சி, அண்ணா சொல்லித் தந்த விஷயங்களை சரியாக கற்றுத் தந்து வளர்த்திருந்தால், இந்த நிலைமைக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார். அமைச்சர் ரமேஷ் பேட்டி திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர், எல்லா இடங்களிலும் ஆபாசமாகவும், அவதூறாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை, என்னதான் சட்டரீதியாக நாம் திர்த்தாலும், முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தனது மகனுக்கு 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணா சொல்லித் தந்த விஷயங்களை சரியாக கற்றுத் தந்து வளர்த்திருந்தால், இந்த நிலைமைக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை. தனது மகனுக்கு மட்டுமல்ல, கட்சிக்காரர்களுக்கும் அவர் கற்றுத் தரவில்லை. அதனால்தான் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அமைச்சர்களும் அப்படித்தான் இருந்தார்கள்” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-did-not-teach-udhayanidhi-about-duty-dignity-and-control-minister-ramesh




