சென்னை, வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. இன்னும் தென்மேற்கு பருவமழை விலகும் சாத்தியக்கூறுகள் குறித்த தகவல் இல்லாத நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளம், கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு உள்கர்நாடகா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. சில தெற்கு பகுதிகளில் மழை இயல்பைவிட அதிகமாகவும் பெய்யக்கூடும். வெப்பநிலை எனினும், நாடு முழுவதும் அக்டோபர் மாத சராசரி மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பெரும்பாலான பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர் வால் வலுவான 'எல்நினோ' சூழல் நிலவுகிறது. இந்த எல்நினோ சூழல் இந்த ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/weather/likelihood-of-normal-northeast-monsoon-rainfall-in-tamil-nadu




