நீலகிரி, கூடலூர், சேரம்பாடி மற்றும் உப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோ கம் இருக்காது. இதன்படி கூடலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1-வது மைல், 2-வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந் தொரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக் கோட்டை, கார்குடி, தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேரம்பாடி டவுன், எருமாடு, சோலாடி, கன்னம்வயல், தாளூர், நாயக்கன்சோலை, பொன்னச்சேரர், கையுன்னி, கக்குண்டி ஆகிய பகுதிகளிலும், உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பட்டி, அத்திகுன்னா, குந்தலாடி. பொன்னானி, கொளப்பள்ளி, ராக்வுட், தேவாலா, எல்லமாலா, அய்யன் கொல்லி, பந்தலூர், நாடுகாணி மற்றும் வுட் பிரேர் நம்பர் 3 டிவிஷன் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல் குந்தா துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தோட்ட கம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், கரியமலை, தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரிய சீகை, மஞ்சக்கொம்பை, குந்தா பாலம், பெங்கால் மட்டம். முக்கிமலை, எடக்காடு, காயகண்டி, எமரால்டு, அண்ணாநகர், தூனேரி, மட்ட கண்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-the-nilgiris-experiencing-power-outages-today




