பெங்களூரு, கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகிறது. அதுபோல், பெங்களூருவில் உள்ள 5 மாநகராட்சி பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று எஸ்.ஐ.ஆர். பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மத்திய நகர மாநகராட்சியில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் சாந்திநகர் சட்டசபை தொகுதியில் வருவாய் துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், காந்திநகர் தொகுதி வருவாய் துறையில் அதிகாரியாக பணியாற்றிய உமேஷ், சாம்ராஜ்பேட்டை தொகுதியில் வணிக வரித்துறை இன்ஸ்பெக்டராக வேலை செய்த ரேகா, சிவாஜிநகர் தொகுதியில் கல்வித்துறை சிறப்பு அதிகாரியான மஞ்சுநாத் மற்றும் ராஜாஜிநகர் தொகுதி வருவாய் துறை அதிகாரி குமார் ஆகிய 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/5-corporation-officials-dismissed-for-negligence-in-sir-work




