நிக்கோலஸ் கேஜ் நடித்த போர்டிட்யூட் படத்தின் மாஸ்டர் காப்பி திருடப்பட்டதால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 105 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி படக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. போர்டிட்யூட் என்பது சைமன் வெஸ்ட் இயக்கிய ஸ்பை திரில்லர் படமாகும். இந்த படத்தில் நிக்கோலஸ் கேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் மேத்யூ கூட், எட் ஸ்க்ரெயின், ஆலிஸ் ஈவ், மைக்கேல் ஷீன் மற்றும் பென் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நெட்பிளிக்ஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 'போர்டிட்யூட்' திரைப்படத்தின் மாஸ்டர் காப்பி திருடப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 105 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்கு இந்த சம்பவத்தால் படத்தின் வணிக மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தயாரிப்பாளர் சைமன் அப்ரம், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 105 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) இழப்பீடு கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தின் ஒரே மாஸ்டர் காப்பி திருடப்பட்டதால் வெளியீட்டுத் திட்டம், விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் விருதுப் போட்டிகளுக்கான திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் மறுப்பு இந்த குற்றச்சாட்டுகளை நெட்பிளிக்ஸ் மறுத்துள்ளது. படத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை தயாரிப்பாளர்களே முறையாக பின்பற்றவில்லை என்றும், திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதுடன், படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/fortitude-master-copy-stolen-rs-1000-crore-compensation-lawsuit-filed-against-netflix




