சென்னை, 4-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் நடந்தது. 8 வீரர்கள் பங் கேற்ற இந்த போட்டியில் 7-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. புள்ளிபட்டியலில் முன்னணி வகித்த பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜா தனது கடைசி லீக்கில் இந்தியாவின் அர்ஜூன் எரிகசியுடன் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 19-வது நகர்த்தலில் தன்னை எதிர்த்த அமெரிக்காவின் ஹான்ஸ் நிமானிடம் டிரா கண்டார். இந்தியாவின் பிரனேஷ்- நிஹால் சரின் இடையிலான மோதலும் டிராவில் முடிந்தது. இறுதி சுற்று முடிவில் அலிரெஜா 4.5 புள்ளிகளுடன் (2 வெற்றி, 5 டிரா) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டிமிட்ரி 4 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 6 டிரா) 2-வது இடத்தையும், இந்தியா வின் எரிகைசி 4 புள்ளியுடன் (2 வெற்றி. 4 டிரா, ஒரு தோல்வி) 3-வது இடத்தையும் பெற்ற னர். குகேஷ் 2 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/grandmasters-chess-french-player-crowned-champion




