தூத்துக்குடி, தூத்துக்குடியில் வருகிற 18-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாதாந்திர பராமரிப்பு பணி தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் 18.9.2026, வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறது. குடிநீர் விநியோகம் நிறுத்தம் இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-to-be-stopped-in-thoothukudi-on-the-18th-corporation-announcement




