சென்னை, அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'சீ யூ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிஷன் தாஸ் கதாநாயகனாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜுனம் இசையமைத்துள்ளார். கவனம் ஈர்த்துள்ள நாயகன் - நாயகி கூட்டணி நடிகர் கிஷன் தாஸ், சமீபத்தில் வெளியான 'ஆரோமலே' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதேபோல், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும், கமல்ஹாசன் நடித்த 'தக் லைப்' படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அண்மையில் அவர் நடித்த 'பரிமளா அண்ட் கோ' திரைப்படமும் வெளியாகி இருந்தது. முதல்பார்வை போஸ்டருக்கு வரவேற்பு 'சீ யூ' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இன்று மாலை டைட்டில் டீசரை வெளியிடும் தனுஷ் இந்த நிலையில், 'சீ யூ' திரைப்படத்தின் டைட்டில் டீசர் தொடர்பான புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6.00 மணிக்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்கள் மூலம் இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் வெளியிடவுள்ள டைட்டில் டீசர் மூலம் படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் உருவாக்கம் குறித்த முக்கியமான காட்சிகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். The Title Teaser of Kishen Das' will be released by at 6PM Today. — Laxmi Kanth (@iammoviebuff007) July 16, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanush-to-release-the-teaser-of-the-film-see-you-starring-sanjana




