தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை காண வேண்டுமென ஆர்வத்தோடு கூடிய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கின்றனர். முதல்வரின் லண்டன் ரசிகர் சந்திப்பு சொதப்பியதற்கு அவரின் தனி பாதுகாவலர் `மூசா'தான் முக்கிய காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். முதல்வரை சந்திக்க கூடிய கூட்டம் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய உள்விவகாரங்கள் அறிந்த சிலர், 'முதல்வர் விஜய் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி துபாய் வழியாக மறுநாள் லண்டன் வந்து சேர்ந்தார். லண்டனில் தி ஷார்ட் என்கிற உயரமான கட்டிடத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். விமான நிலையம் தொடங்கி, முதல்வர் தங்கியிருந்த ஹோட்டல், சில்வர்ஸ்டோன் ரேஸிங் மைதானம் என எல்லா இடத்திலுமே அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதே முதல்வர் பாதுகாப்புக்கென இருக்கும் கோர் செல் அதிகாரிகளுக்கும் லோக்கல் போலீஸூக்கும் பெரும் பாடாக இருந்தது. அப்படியிருக்க, முதல்வர் தனியாக நியமித்திருக்கும் பாதுகாவலரான மூசா முதல்வருகளின் பாதுகாப்புக்கென இருக்கும் ப்ரோட்டோகால்கள் எதைப் பற்றியும் அறியாமல் கொடுத்த வாக்குறுதிதான் பிரச்னை ஆகிவிட்டது. முதல்வர் லண்டனின் தரையிறங்கிய உடனேயே அவரை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர். முதல்வரை சந்திக்க கூடிய கூட்டம் அந்தக் கூட்டத்தை அப்படியே விட்டிருந்தால் முதல்வர் வந்து கையசைத்திருப்பார். அவர்கள் கலைந்து போயிருப்பார்கள். ஆனால், மூசா, '15 ஆம் தேதி ஒரு ரசிகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அன்று வந்து முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்' என வாக்குறுதி கொடுத்துவிட்டார். முதல்வர் தரப்பு லண்டன் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்த நினைத்தது உண்மைதான். ஆனால், அதற்கென ப்ரோட்டோக்கால் இருக்கிறது. லண்டன் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச வேண்டும். இந்த பிராசஸ் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே மூசா ரசிகர்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அந்தத் தகவல் லண்டன் வாழ் தமிழர்களின் சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவ நேற்று முதல்வர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். பெர்மிசன் எதுவும் இல்லாமல் லோக்கல் போலீஸின் சப்போர்ட் இல்லாமல் இவர்களை எப்படி முதல்வரிடம் நெருங்க செய்ய முடியும்? `தி ஷார்ட்' பகுதி அதி சொகுசான இடம். அங்கே இருக்கும் மற்ற விவிஐபிக்களின் பாதுகாப்பையும் லோக்கல் போலீஸ் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கவில்லை. இந்த குழப்பத்தை சரி செய்து கூடியிருந்த கூட்டத்தை கலைப்பதற்குள் முதல்வரின் Core Cell டிஐஜி தர்மராஜ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திக்குமுக்காடிவிட்டனர்' என்கின்றனர். மூசா - தர்மராஜ் 'ரசிகர் சந்திப்பு தகவலை மூசா முன்கூட்டியே சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் மூசா மீது அதிருப்தியில் இருக்கின்றனராம். ஆனாலும் முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு விஷயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர்' என அதிகாரிகள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/moosas-call-for-fans-meet-cm-vijays-security-officers-got-irritated-back-story-of-london-fans-meet-cancellation




