தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கடலையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலையில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டின் கதவை உடைத்து பணம், வெள்ளி கொலுசு திருட்டு இந்த நிலையில், நேற்று காலையில் சத்யா தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் திறக்கப்பட்டிருந்தது. பீரோவை சோதித்தபோது, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. சத்யா ஊரில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-net-mysterious-individuals-who-broke-down-the-door-of-a-house-and-stole-money-and-silver-rings




