திருவள்ளூர், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 58 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் அமைக்கப்படும் சிறப்பு கவுண்ட்டர்களில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில், பக்தர்கள் தங்கள் செல்போன்களை வைப்பதற்கான கவுண்ட்டர் திறக்கப்பட்டது. அதற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் திருத்தணியில் கடந்த வார இறுதியில் செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர்கள் மூடப்பட்டு, பக்தர்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கோவிலுக்குள் எடுத்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று திருத்தணியில் செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், இலவசமாக பக்தர்கள் தங்கள் செல்போன்களை வைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வரிசையில் நின்று தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றனர். இந்நிலையில், இந்த இலவச செல்போன் கவுண்ட்டர் நடைமுறைக்கும் பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், செல்போன்களை ஒப்படைக்க சுமார் அரை மணி நேரம், அதே போல், செல்போனை திரும்ப பெறுவதற்கு மீண்டும் ஒரு அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/free-mobile-phone-safekeeping-counter-opened-at-thiruttani-murugan-temple




