கடந்த வார இறுதியில் ஈரான் போர் குறித்து ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது’ என்று இனிப்புச் செய்தி சொன்னார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூட ட்ரம்ப், ‘வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்ததும் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படும்’ என்று ஓரளவு பாசிட்டிவாகத்தான் பேசியிருந்தார். பேச்சுவார்த்தை. ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தனர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட அதிகாரிகள். அங்கே ஈரான் அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹார்முஸ் நீர்ச்சந்தி"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" - ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு ஈரான் அப்போது. கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரப் பயங்கரவாதம் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும். இரு கடலோர அரசாங்கங்களுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையை ஏற்க வேண்டும் ஆகிய 7 நிபந்தனைகளை அமெரிக்காவிடம் வைத்தது. ஈரான் போர் முடிப்பதற்கான ஆரம்பப் பணிகளைச் செய்யத் தொடங்கினாலே, அடுத்த 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தார். ட்ரம்ப் அந்தர்பல்டி எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று தோன்றிய சூழலில், தற்போது மீண்டும் அந்தர்பல்டி அடித்துள்ளார் ட்ரம்ப். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் ஈரானின் ஒப்பந்தத்தை நிராகரிக்கிறேன். போரில் மிகவும் மோசமாகத் தோற்றுக் கொண்டிருப்பதால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை உடனடியாகத் திறந்துவிடக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை அவர்கள் செய்ய விரும்புகிறார்கள். ட்ரம்ப்'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' - மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர நினைக்கிறார்கள். அது நல்லதுதான் என நான் கருதுகிறேன். ஒப்பந்தங்கள் செய்வதில் எனக்கும் விருப்பம்தான், ஆனால் அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 'நாம் இந்த நீர்ச்சந்தியை மூடி, உலகிற்கே ஒரு பெரிய பிரச்னையை உருவாக்குவோம்’ என்று நினைத்தார்கள். ஆனால் நான் உள்ளே வந்து, ராணுவ வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கடற்படை முற்றுகையை நாம் அங்கு ஏற்படுத்தினேன். இதனால் இப்போது அவர்களிடம் கையில் காசே இல்லாமல் போய்விட்டது.” என்று பேசியிருக்கிறார். மேலும், மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீதே பெரிய தாக்குதல்கள் நடக்கும் என்று வேறு பேசியிருக்கிறார். அடுத்து என்ன நடக்குமோ? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/trump-rejects-iran-deal-to-reopen-strait-of-hormuz




