சிவகங்கை, தமிழகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாளை பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடப்பதன் காரணமாக, சீருடைகளை வழங்குவதற்காக பல மாணவர்களை வேன் மூலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன், ஒரு லாரியோடு மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் மற்றும் ஓட்டுனர், உதவியாளர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மாவட்ட கல்வி அலுவலரின் நோட்டீருக்கு பள்ளி நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-students-meets-with-accident-in-sivaganga-education-officer-issues-notice-to-school-management




