ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் 3 இளநிலை டாக்டர்கள் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள டிம்னா ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். ஏரியில் மூழ்கிய டாக்டர்கள் அப்போது ஒரு டாக்டர் வைத்திருந்த செல்போன் ஏரிக்குள் விழுந்துள்ளது. இதை அந்த டாக்டர் எடுக்க ஏரிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அந்த டாக்டர் ஏரியில் மூழ்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக டாக்டர்கள் 2 பேர் ஏரிக்குள் மூழ்கிய சக டாக்டரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது 3 பேரும் ஏரி தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதில் ஒரு டாக்டர் மட்டும் ஏரி தண்ணீரில் இருந்து வெளியேறி உயிர்பிழைத்தார். ஆனால் ஏஞ்சிய 2 இளநிலை டாக்டர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். செல்போன் எடுக்கச்சென்ற டாக்டர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/2-doctors-drown-while-trying-to-retrieve-phone-from-jharkand-lake




