புதுடெல்லி, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரை வங்காளதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையில், டெல்லியில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பங்கேற்க வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமான் இந்தியாவிற்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தாரிக் ரகுமானின் இந்திய வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய ஜனாதிபதி மாளிகை உறுதி செய்துள்ளது. அவரது வருகையை முன்னிட்டு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்காளதேச பிரதமரை முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சிக்கான முழு ஒத்திகை நடைபெறவுள்ளதால், வரும் 22-ந்தேதி(நாளை) ஜனாதிபதி மாளிகையின் முன்புற முற்றத்தில் நடைபெறவிருந்த 'காவலர் மாற்றும் நிகழ்ச்சி' (Change of Guard Ceremony) நடைபெறாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/bangladesh-prime-ministers-visit-to-india-intensive-preparations-at-rashtrapati-bhavan-in-delhi




