சென்னை, சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராவது உறுது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்ள இந்தியாவே தயாராக இருக்கிறது. தமிழ்நாடும் தயாராகி இருக்கிறது. ஆனால், காங்கிரஸ்காரர்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி?நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். சிலர் பணியாற்ற அலட்சியம் காட்டி வருகிறார்கள். வரும் காலங்களில் வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் பொறுப்பும் பதவிகளும் வழங்கப்படும். ஆட்சியிலும், அதிகாரத்திலும் கூட்டணி அரசோடு இருக்கிறோம். நம்மைப் பார்த்து சிலர் சொல்கிறார்கள், நம்மை முதுகில் குத்து விட்டார்கள், நம்மை ஏமாற்றி விட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்வேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஒரு நாளும் யாரையும் ஏமாற்றாது. ஒரு நாளும் யாரையும் முதுகில் குத்தாது, முதுகில் குத்தும் பழக்கம் காங்கிரசுக்கு இல்லை. தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து பல சலுகைகள் தரப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களா, ராஜ்யசபாவா, ஊராட்சி உள்ளாட்சியா என எதுவானாலும் அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். கூட்டாட்சி தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் தி.மு.க. உடன் இருக்க வேண்டும் என நினைத்தோம்.ஆனால் தேர்தலுக்குப் பிறகு நிலைமை வேறு. தமிழ்நாட்டில் முன் வாசல் வழியாகவோ, பின் வாசல் வழியாகவோ பா.ஜனதா வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாம் இந்த நிலைபாட்டை எடுத்தோம். லஞ்சம் ஊழலுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கு ஆதரவாக நாமும் இருக்கிறோம் என நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-will-never-stab-anyone-in-the-back-kc-venugopal




