தஞ்சாவூர், 9 ஆயிரம் காலிப்பணியிடங்களும் இன்னும் 2 ஆண்டுகளுக் குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். 2,708 பேராசிரியர்கள் நியமனம் தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 'கல்லூரி உள்ளக குழுவினருக்கான பயிற்சி' தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அமைச்சர் விஸ்வநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் 9 ஆயிரம் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 3 கட்டங்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடந்து வருகிறது. முதல் கட்டத்தேர்வு 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டு இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2,708 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்ததாக 2-ம் கட்ட, 3-ம் கட்ட தேர்வு வர உள்ளது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்வுகளில் தலா 3 ஆயிரம் பேர் வீதம் தேர்வு செய்து, மொத்தம் 9 ஆயிரம் காலிப்பணியிடங்களும் இன்னும் 2 ஆண்டுகளுக் குள் நிரப்பப்படும்" என்று அவர் கூறினார். திடீரென மின் தடை முன்னதாக, விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த கூட்ட அரங்கம் இருள் நிறைந்து காணப்பட்டது. மின் தடை ஏற்பட்டாலும் அமைச்சர் விஸ்வநாதன் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். சுமார் 10 நிமிடத்திற்கு பிறகு மின்சாரம் வந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டது. பேசி முடித்துவிட்டு அமைச்சர் அமர்ந்தபோது மின்தடையைத்தான் நாளை செய்தியாக போடுவீர்கள் என நிருபர்களை பார்த்து கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/9000-lecturer-vacancies-will-be-filled-within-two-years-minister-viswanathan




