திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காாரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மின்தடை வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை (8.7.2026, புதன்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழ்குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான் மொழி, கரைசுத்து உவரி, கூட்டபணை, கூடுதாளை, குட்டம், விமணங்குடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். நாளை மறுநாள் மின்தடை இதேபோல் வள்ளியூர் மின் கோட்டத்தில் உள்ள கோட்டைகருங்குளம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (9.7.2026, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-tomorrow-and-the-day-after-tomorrow



