அடிஸ் அபாபா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு பிரார்த்தனை செய்ய நேற்று முன் தினம் காலை ஏராளமானோர் சென்றுள்ளனர். மலைப்பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் 21 பேர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். 14 பேர் பலி அப்போது திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுடன் பாறைகள் உருண்டு மதவழிபாட்டு தலம் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் மத வழிபாட்டு தலத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/landslide-in-ethiopia-14-killed




