நெல்லை, கல்வி, கலாசாரம், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழும் மாநிலம் தமிழகம். அனைத்திற்கும் மேலாக 'அமைதிப் பூங்கா' என கருதப்படும் தமிழகத்தில், அதிகரித்து வரும் தொடர் படுகொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. முதலிடத்தில் தூத்துக்குடி முக்கியமாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 141 கொலைகள் நடந்து உள்ளன. இதில் முதலிடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 51 கொலைகளும், நெல்லை மாவட்டத்தில் 47 கொலைகளும் (3 இரட்டைக் கொலைகள் உள்பட), தென்காசி மாவட்டத்தில் 20 கொலைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 23 கொலைகளும் நடந்து உள்ளன. 8 கொலைகள் இது ஒட்டுமொத்த பொதுமக்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 8 கொலைகள் நடந்து உள்ளன. நெல்லை இதன்படி நெல்லை டவுன் அருகே உள்ள மணிபுரம் பகுதியை சேர்ந்தவர் டால்டன் (வயது 76). இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து உள்ளார். இவரது அண்ணன் நிக்கோலஸ் ராஜரத்தினம் (78). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் (43). இவரது குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் டால்டன் வீட்டின் அருகே உள்ளது. 'பார்க்கிங்' தகராறு இந்த கோவிலை சுற்றியுள்ள காலி இடத்தில் டால்டன் குடும்பத்தினர் தங்களின் காரை நிறுத்துவது வழக்கம். இதை செந்தில் கண்டித்து வந்தார். இந்த 'பார்க்கிங்' தகராறு காரணமாக நேற்று டால்டன், அவரது அண்ணன் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியோரை செந்தில் கத்தியால் குத்திக்கொன்றதாக கூறப்படுகிறது. தகராறு செந்தில்குமார் சென்னையில் வெல்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் செந்தில்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று காலை கோவில் அருகே காரை நிறுத்துவது தொடர்பாக செந்தில்குமாருக்கும், டால்டனின் மகன் நரேனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதை பார்த்த நரேனின் பெரியப்பா நிக்கோலஸ் ராஜரத்தினம் தகராறை விலக்கி விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாக குத்தினார். இதில் அவர் அலறிதுடித்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். அவரது சத்தம் கேட்டு டால்டன் அங்கு ஓடி சென்றார். அப்போது ஆத்திரம் தீராத செந்தில்குமார் டால்டனையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டால்டனின் மகன் நரேன், செந்தில்குமாரை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. மேலும் டால்டனை குத்தியபோது செந்தில்குமாரின் கைகளிலும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அப்பகுதி மக்கள் இதைப்பார்த்து போலீசில் புகார் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு டவுன் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டால்டன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே டால்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் நிக்கோலஸ் ராஜரத்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே நிக்கோலஸ் ராஜரத்தினம் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே காயமடைந்த நரேன், கொலையாளி செந்தில்குமார் ஆகியோரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் நேற்று (செவ்வாய் கிழமை) நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கணவன், மனைவி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-arrested-in-connection-with-a-double-murder-incident-in-nellai




