தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், 2029-ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் எனக் தவெக தரப்பிலிருந்து அழுத்தமாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் - தவெக என இருகட்சிகளுக்கிடையே கருத்து மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாடு அரசியலில் சமீப நாட்களாகத் தளபதி தான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டிலும் இதே போன்ற விவாதங்கள் எழுந்தபோது, 2026-ல் என்ன நடக்கும் என்று நான் கணித்து முதல்வராக தளபதிதான் வருவார் என்றேன். அதுதான் நடந்தது. ராகுல் காந்தி, விஜய் அதேபோல, வரும் 2029-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மிக முக்கிய மாற்றங்கள் நடக்கும். குறிப்பாக, நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை. மாறாக, தமிழ்நாடுதான் அதை முடிவு செய்யப்போகிறது. 2029-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை நாடு பார்க்கப்போகிறது. தற்போதைய சூழலில், ராகுலை ஏற்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்த பேச்சுக்கள் எழுந்தாலும், 2029 தேர்தலுக்குப் பிறகுதான் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியும். தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் கைபிடித்து அமர வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2029-ம் ஆண்டிலும் அவரே தளபதியின் கரங்களைப் பிடித்து டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார். இதை ஆணித்தரமாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் அப்போது யார் முதல்வராக இருப்பர் என்பதை அப்போது பார்க்கலாம்." என்றார். `சரியும் ராகுல் பிம்பம்; திக்குமுக்காடும் காங்கிரஸ்?' மாணிக்கம் தாகூர், விஜய் சந்திப்பு; பின்னணி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tvk-mla-kanimozhi-has-stated-that-vijay-will-become-cm-in-2029-and-pm-thereafter



