சென்னை, மேட்டூர் அணை திறப்பு கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப் பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்கு தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வருகிற 1-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 1-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார். பாசனப் பணி இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும், திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடி பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளிநீரும் அதிகபட்ச பாசன பயனை அளிப்பதையும் 'ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்' கிடைப்பதையும் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-farmers-advised-to-commence-irrigation-activities




