அமராவதி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்கவி (வயது 35). இவர் தனது 2 குழந்தைகளுடன் நின்ட்ரா திருத்தணி சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சி.என். கண்ட் ரிகா அருகே வேகத் தடை மீது மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த மர்ம நபர் ஒருவர் பார்கவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து பார்கவி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/5-sovereigns-of-jewelry-snatched-from-a-woman-riding-a-scooter-with-her-children




