உள்துறை அமித்ஷா மாமல்லபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; - முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில், வந்தே மாதரத்தை இரண்டு பகுதிகளாக 1937-ல் காங்கிரஸ் கட்சி, பிரித்தது. இதுவே இந்தியப் பிரிவினைக்கு அடித்தளமிட்டது. காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என முடிவு செய்து, அக்கட்சியின் 1937ம் ஆண்டு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவின்போது, முழுப் பாடலையும் பாடியும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தியும், பிரதமர மோடி வரலாற்றுப் பிழையைச் சரிசெய்ய முயன்றார். புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முழுப் பாடலையும் பாட வேண்டும் என அரசு முடிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையைப் புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை அவமதிக்கிறது. வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பியபோது, சுதந்திரப் போராட்டத்தின் போது போராட்ட வீரர்கள் பல ஆண்டுகள் சிறையில் கழித்தனர். திருப்திப்படுத்தும் அரசியல் தற்போது நாடாளுமன்ற சட்டத்தை நிராகரிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் தற்போது தனது 1937ம் ஆண்டு கட்சித் தீர்மானத்தைப் பின்பற்றி வருகிறது, காங்கிரஸ் மீண்டும் திருப்திப்படுத்தும் அரசியலைப் பின்பற்றி வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக, மறைந்த பங்கிம் பாபுவின் அழியாத படைப்பை மட்டுமல்லாமல், ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட்டபடி நாட்டின் சுதந்திரத்திற்காக தூக்குமேடை ஏறிய லட்சக்கணக்கான தியாகிகளையும், பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களையும் அவர்கள் அவமதித்துள்ளனர்”என்றார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/vande-mataram-song-issue-amit-shah-launches-scathing-attack-on-congress




