ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரு ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின் 4ம் நாளில் (08.08.2026) மூலவர் திருவேங்கடமுடையான் திருக்கோலத்திலும், உற்சவர் பூவராகன் திருக்கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதித்தார். இந்த சிறப்பு திருக்கோல காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கஜலட்சுமி திருக்கோலத்தில் ஆண்டாள் இதேபோல் ஸ்ரீரங்கம் ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடைபெறுகிறது. 4ம் நாளான நேற்று (08.08.2026) ஆண்டாள் நாச்சியார், கஜலட்சுமி திருக்கோலத்தில் அருள்பாலித்தார். இதனை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/srirangam-aadi-pooram-festival-andal-blessed-devotees-in-the-divine-form-of-lord-thiruvengadamudayan




