திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவர் பவளவண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு அலங்காரம் அவ்வகையில் புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று உற்சவர் பவளவண்ண பெருமாளுக்கு வெண்பட்டு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், ஏலக்காய், லவங்கம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களால் சுமார் 35 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. உற்சவர் மகாலட்சுமி தாயாருக்கும் ஏலக்காய் மாலை, ஜடை கிரீடம் மற்றும் ஏலக்காய் அங்கி அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அழகிய கோலம் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவில் வாசலில் ராஜகோபுரத்தை தரிசனம் செய்யும் வகையில் வண்ண வண்ண நிறங்களில் அழகிய கோலம் வரையப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து சென்றனர். இதைபோல சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/special-alankaram-for-kalyana-varadaraja-perumal-in-kaladipet




