சென்னை, தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. இதில் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22667), நாளை (1-ந்தேதி முதல்) வருகிற செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22668), இன்று (31-ந்தேதி) முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது. ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16780), நாளை மறுநாள் (2-ந்தேதி) முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16779), ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-added-to-rameswaram-tirupati-express-train




