பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஜுகுவில் உள்ள கபோல் ஹவுசிங் சொசைட்டி பங்களாவில் வசித்து வருகிறார். இது 7802 சதுர அடி கொண்டது ஆகும். எனவே தனது பங்களாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாடகைக்கு விட அஜய் தேவ்கன் முடிவு செய்துள்ளார். அந்த இடத்தில் சலூன் மற்றும் ஸ்பா தொடங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் வர்த்தக பணிகளை மேற்கொள்ள அப்பகுதி குடியிருப்புவாசிகளும், ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதி இல்லாமல் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதாக கூறி ஹவுசிங் சொசைட்டி நிர்வாகம் மும்பை மாநகராட்சியில் புகார் செய்துள்ளது. இதையடுத்து கபோல் ஹவுசிங் சொசைட்டி வளாகத்தில் அமைந்துள்ள நடிகர் அஜய் தேவ்கனின் பங்களாவில், சலூன் மற்றும் ஸ்பா (salon and spa) ஒன்றை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை நிறுத்தும்படி மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்தச் சொத்தை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த நோட்டீசில், அஜய் தேவ்கனிடம் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்க அஜய் தேவ்கன் குடும்பத்தினர் நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளனர். இது குறித்து உள்ளூர் கவுன்சிலர் சுதா சிங் கூறுகையில், "கே-மேற்கு வார்டின் கட்டிடம் மற்றும் தொழிற்சாலைத் பிரிவின் கீழ் இந்தப் பிரச்சனை உள்ளது. அஜய் தேவ்கனில் S-10 வளாகத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. கபோல் ஹவுசிங் சொசைட்டி புகார் அளித்ததை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சொத்து உரிமையாளர்களிடம் உரிய ஆவணங்களைக் கோரியது. ஆனால் தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படாததால், கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது," என்று தெரிவித்தார். ரூ.10 கோடி வாடகை இருப்பினும், அஜய் தேவ்கன் தரப்பில் விசாரித்தபோது, "குறிப்பிட்ட வளாகத்தைப் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர். அஜய் தேவ்கன் தனது சொத்தை சலூன் மற்றும் ஸ்பா தொடங்க 'ஃப்ளோரியன் ஹுரல் சலூன்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Florian Hurel Salons Pvt Ltd) நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ஆண்டில் மாத வாடகை ரூ. 16 லட்சமாகவும், ஆண்டுதோறும் 5% வாடகை உயர்வுடனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த வாடகைத் தொகை ரூ. 10.61 கோடி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/trending/rs-10-crore-rent-municipal-corporation-halts-salon-construction-at-actor-ajay-devgns-home




