சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்ததற்கு பி.வி. சிந்துவிற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! இந்தியாவின் பெருமை பி.வி.சிந்துவின் ஒவ்வொரு வெற்றியும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் இன்னும் உயர்த்துகிறது. விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகம். இடைவிடாத உழைப்பு வெற்றி என்பது திறமையால் மட்டும் வருவதில்லை; இடைவிடாத உழைப்பு, தோல்விகளைத் தாண்டி மீண்டும் எழும் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கையால் உருவாகிறது என்பதை பி.வி.சிந்து மீண்டும் நிரூபித்துள்ளர். இந்த சாதனை ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரின் கனவுக்கும் புதிய நம்பிக்கையை விதைக்கிறது. இன்னும் பல சர்வதேச பட்டங்களை வென்று நம் பாரத தேசியக்கொடியை உயர பறக்க செய்ய வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்ததற்கு பி.வி. சிந்து அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அவரின் ஒவ்வொரு வெற்றியும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் இன்னும் உயர்த்துகிறது. விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கு ஒரு… — Nainar Nagenthran (@NainarBJP) July 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-congratulates-pv-sindhu-on-winning-the-japan-open-womens-singles-title




