மும்பையில் புகழ்பெற்ற விநாயகரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வழிபட்டார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா பந்தலுக்கு சென்றார். இவருடன் அவரது மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மேலாளர் பூஜா டட்லானி ஆகியோர் உடன் சென்றனர். பிரபலமான பந்தலில் ஷாருக்கானின் வருகையால் ஏராளமான பக்தர்களும் ரசிகர்களும் திரண்டனர். அவரை காணும் ஆவலில் மக்கள் சூழ்ந்திருக்க, நடிகர் ஷாருக்கானுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பல பாலிவுட் பிரபலங்கள் வருகை இந்த நிகழ்விற்காக ஷாருக்கான் நீல நிற குர்தா அணிந்திருந்தார். சுஹானா பச்சை நிற பாரம்பரிய உடையிலும், கௌரி மஞ்சள் நிற இனிய உடையிலும் அவருடன் வந்திருந்தனர். இந்த ஆண்டு கணேஷோத்சவத்தின் போது, மேலும் பல பாலிவுட் பிரபலங்களும் லால்பாக்சா ராஜாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பிருத்விராஜ் சுகுமாரன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக், ஷில்பா ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் பலர் அடங்குவர். வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியது குறித்து ஷாருக்கான் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskSRK அமர்வின்போது ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர், தனது குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் குறித்துப் பேசினார். மேலாளர் துப்பட்டாவை எடுத்து முகத்தை துடைத்த ஷாருக்கான் சாமி தரிசனம் செய்யும் சமயத்தில் ஷாருக்கானின் கண்ணில் ஏதோ விழுந்துவிட்டது. அந்த சமயத்தில், ஷாருக்கான் உடனடியாக தனது மேலாளர் பூஜாவின் துப்பட்டாவை எடுத்து முகத்தைத் துடைத்தார். தனது மனைவியும், மகளும் அருகில் நின்றுகொண்டிருந்த போதிலும், மேலாளரின் துப்பட்டாவில் அவர் முகம் துடைத்ததைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். | Maharashtra: Actor Shah Rukh Khan offers prayers at the famous Lalbaugcha Raja pandal in Mumbai. — ANI (@ANI) September 21, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-shah-rukh-khan-worshipped-lord-ganesha-with-his-family




