புதுடெல்லி, மேகதாது விவகாரம் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும் சர்ச்சை இதற்கிடையில், மேகதாது அணை குறித்து மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த பதிலில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதனையடுத்து மேகதாது அணை விவகாரத்தில் மத்திய மந்திரியின் பதிலை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி நோட்டீஸ் இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மேகதாது அணை விவகாரம் குறித்தும், தமிழ்நாட்டிற்கு உடனே 4 டிஎம்சி நீர் திறப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தவறான பதில் அளித்ததாக குற்றம் சாட்டி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/mekedatu-dam-issue-congress-notice-in-rajya-sabha




